தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே குள்ளனூரைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி சதீஷ், சனிக்கிழமை மாலை சிக்களுர் - சித்தேரி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அரசு மருத்துவமனையில் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து கோட்டப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.