தர்மபுரி திமுக கிழக்கு மாவட்டம் சார்பில், தனியார் திருமண மண்டபத்தில் திமுக பூத் டிஜிட்டல் ஏஜென்ட் மற்றும் பூத் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், தர்மபுரி திமுக தொகுதி பார்வையாளர் செங்குட்டவன் மற்றும் பெண்ணாகரம் தொகுதி பார்வையாளர் பாரி ஆகியோர் கலந்துகொண்டு, எஸ்.ஐ.ஆர் (SIR) குறித்து நிர்வாகிகளுக்குப் பயிற்சிகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி திமுக கிழக்கு மாவட்ட முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான பூத் கமிட்டி முகவர்கள் பங்கேற்றனர்.