தர்மபுரி: எம்பி தலைமையில் திமுக பரப்புரை கூட்டம்

1பார்த்தது
தருமபுரி மாவட்டம், அரூர் மேற்கு ஒன்றியம் வீரப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் திமுக உங்களை தேடி உங்கள் ஊராட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது. தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் மணி கலந்துகொண்டு, அரூர் சட்டமன்ற தேர்தலில் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், வீடு வீடாகச் சென்று திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த பரப்புரை கூட்டத்தில் திமுக மாவட்ட, மாநில, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி