தர்மபுரி மாவட்டம் அரூர் தொகுதிக்குட்பட்ட மோப்பரிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை திமுக வாக்குச்சாவடி முகவர் கூட்டம் நடைபெற்றது. அரூர் நகரச் செயலாளர் முல்லை ரவி ஏற்பாடு செய்த இந்த கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர, அரசின் நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு வீடு வீடாக எடுத்துரைத்து பிரச்சாரம் செய்யவும், கட்சிப் பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில் அரூர் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் மாவட்ட, மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.