தர்மபுரி மாவட்டம் கோபிநாதம்பட்டி காவல் ஆய்வாளர் லட்சுமி மற்றும் காவலர்கள் நேற்று சனிக்கிழமை மாலை ஜம்மனஹள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த முதியவரை விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், அவரிடம் இருந்த பையை சோதனையிட்டதில், 500 கிராம் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, காவல்துறையினர் அவரை கைது செய்தனர். விசாரணையில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த குள்ளன் என்பதும், கஞ்சா விற்பனைக்காக அங்கு நின்றதும் தெரியவந்துள்ளது.