தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்டு தொம்பரகாம் பட்டியை சேர்ந்தவர் முத்துவேடி 78 வயது மூதாட்டி இவர் இன்று விடியற்காலை தொம்பரகாம்பட்டி தேசிய நெடுஞ்சாலை ஜங்ஷன் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மூதாட்டி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி முத்துவேடி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து வந்த தொப்பூர் காவலர்கள் இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தொப்பூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.