தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில், மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் அரூரில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 09) மாலை நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சத்யராஜ் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நிறுவனர் மாநில பொதுச்செயலாளர் சரவணன், மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாநில பொருளாளர் சுரேஷ் ஆகியோர் பங்கேற்றனர். ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.