தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் மாவட்ட சங்கத்தின் சார்பில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பொதுவிநியோகத் திட்டத்திற்கான தனித்துறை உருவாக்கப்பட வேண்டும், டிஎன்சிஎஸ்சி எடை தராசுகள் நியாய விலை கடைகளில் உள்ள விற்பனை முனையத்துடன் இணைக்கப்பட்டு சரியான எடையில் அத்தியாவசியப் பொருட்கள் பொட்டலமாக வழங்கப்பட வேண்டும், ஓய்வு பெற்ற நியாய விலை கடை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.