தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடத்தூர் பேரூராட்சி பகுதியில், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் A. கோவிந்தசாமி ஏற்பாட்டில் நேற்று புதன்கிழமை மாலை 500 குழந்தைகளுக்கு தலா ரூபாய் 250-க்கு புதிய அஞ்சல் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டது. இந்த கணக்குகளுக்கான புத்தகங்களை அதிமுக அமைப்பு செயலாளரும், தருமபுரி மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே. பி. அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் கடத்தூர் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.