தர்மபுரி: கம்பைநல்லூரில் 30 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

1பார்த்தது
கம்பைநல்லூரில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் சிறப்பு ஆட்டுச் சந்தையில் நேற்று வியாபாரிகள் குவிந்தனர். தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கினர். இந்த சந்தையில் ஆடுகள் ரூ. 7,500 முதல் ரூ. 10,200 வரை விற்பனையானதாகவும், மொத்தம் சுமார் 30 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.