தர்மபுரி சந்தைபேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வார சந்தையில் பல்வேறு பகுதியிலிருந்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை வாங்க வந்திருந்தனர். சிறிய ஆட்டுக்குட்டியின் விலை ரூ. 4,000 முதல் பெரிய ஆடுகள் ரூ. 22,000 வரை விற்பனையானது. இன்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் மொத்தம் 32 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.