தர்மபுரி: அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து 20 பேர் படுகாயம்

599பார்த்தது
தருமபுரியில் இருந்து நேற்று நள்ளிரவு புறப்பட்ட அரசு பேருந்து, மொரப்பூர் அருகே சென்னம்பட்டி வளைவில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் 20 பயணிகள் காயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்கப்பட்ட காயமடைந்தோர் அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து மொரப்பூர் காவல்துறையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி