தர்மபுரி: இருமத்தூர் அருகே கள் கடத்தியவர் கைது

253பார்த்தது
தர்மபுரி: இருமத்தூர் அருகே கள் கடத்தியவர் கைது
தருமபுரி மாவட்டம், அரூர் தொகுதிக்கு உட்பட்ட கம்பைநல்லூர் காவலர்கள் திங்கட்கிழமை மாலை இருமத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக இருந்த சூரனூர் கிராமத்தைச் சேர்ந்த குமரவேல் என்பவரை பிடித்து விசாரித்ததில், அவர் 3 லிட்டர் கள்ளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, காவலர்கள் குமரவேலை கைது செய்து கள்ளை பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.