தர்மபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பெய்து வரும் கனமழையால் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. அரூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, சிட்லிங் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 11 மணி வரை கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால், அதிகாலை நேர அத்தியாவசியப் பணிகள் மற்றும் விவசாயப் பணிகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.