தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக செவ்வாய்க்கிழமை இரவு முதல் விடிய விடிய அரூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, சிட்லிங், மொரப்பூர், ஏ. பள்ளிப்பட்டி, மாம்பாடி, அம்மாபேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. மேலும், நல்லம்பள்ளி, தருமபுரி, ஒட்டப்பட்டி போன்ற பகுதிகளில் மிதமான மழை பதிவானது. இந்த தொடர் மழையால் அப்பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.