தர்மபுரி: குடும்பத் தகராறில் லாரி உரிமையாளர் தீக்குளிப்பு

674பார்த்தது
தர்மபுரி: குடும்பத் தகராறில் லாரி உரிமையாளர் தீக்குளிப்பு
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கெண்டிகானஹள்ளி பகுதியைச் சேர்ந்த திருமால் கண்ணன், சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வந்தார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் கடன் சுமை காரணமாக லாரியை விற்றதால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த கண்ணன் நேற்று சனிக்கிழமை தனது உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனைக் கண்ட அவரது மனைவி மற்றும் நான்கு மகள்கள் அவரை அணைக்க முயன்றபோது அவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. காயமடைந்த கண்ணன் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்தி