தர்மபுரி: மளிகை கடையில் குட்கா விற்பனை செய்தவர் கைது

1பார்த்தது
தர்மபுரி: மளிகை கடையில் குட்கா விற்பனை செய்தவர் கைது
தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாணிக்கவாசகம் தலைமையிலான காவலர்கள் ஞாயிற்றுக்கிழமை மொரப்பூர், தாசரஅள்ளி, தொங்கனூர், கெரகோடஅள்ளி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். தொங்கனூர் பகுதியில் ஒரு மளிகை கடையில் சோதனை செய்தபோது, குட்கா பதுக்கி விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. காவலர்கள் குட்காவை பறிமுதல் செய்து, கடை உரிமையாளர் சந்திரகாந்தனை கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
Job Suitcase

Jobs near you