தர்மபுரி: மான்கொம்பு, துப்பாக்கி வைத்திருந்தவருக்கு அபராதம்

479பார்த்தது
தர்மபுரி: மான்கொம்பு, துப்பாக்கி வைத்திருந்தவருக்கு அபராதம்
நல்லம்பள்ளி வட்டத்துக்குட்பட்ட அப்பனஅள்ளி கோம்பை கிராமத்தைச் சேர்ந்த டேங்க் ஆப்ரேட்டர் அனுமந்தன் வீட்டில், இறந்த மான் தலையுடன் கூடிய கொம்பு மற்றும் நாட்டுத் துப்பாக்கிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், புதன்கிழமை மாலை ஆய்வு செய்தபோது அவை கண்டுபிடிக்கப்பட்டன. வனத்துறையினர் அவற்றை பறிமுதல் செய்து, அனுமந்தனிடம் இருந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகையை வசூலித்தனர்.

தொடர்புடைய செய்தி