தர்மபுரி: நிழற்கூடங்கள் அமைக்க எம்எல்ஏ பூமி பூஜை

354பார்த்தது
தர்மபுரி: நிழற்கூடங்கள் அமைக்க எம்எல்ஏ பூமி பூஜை
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, சித்தேரி மாமரத்துப்பள்ளம் மற்றும் சூரியக் கடை பிரிவு ரோடு நிழற்கூடம் அமைக்கும் பணிகளுக்கு நேற்று திங்கட்கிழமை பூமி பூஜை விழா நடைபெற்றது. அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய கழக செயலாளர்கள் விசுவநாதன், பசுபதி, மாவட்ட துணை செயலாளர் செண்பகம் சந்தோஷம், மற்றும் காவல்துறையினர், வனத்துறையினர், உள்ளூர் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த பணிகளுக்காக மொத்தம் ரூ. 23. 46 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி