தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி காரிமங்கலம் வட்டத்துக்கு உட்பட்ட வேடிகொட்டாய் பகுதி சேர்ந்த பெரியசாமி மகன் வெங்கடேசன் இவர் காரிமங்கலம் பகுதியில் தனியார் பால் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார் நேற்று இவர் திப்பம்பட்டியில் இருந்து தனது பாட்டி வீட்டுக்கு சென்றபோது வெங்கடேஷ் மோட்டார் சைக்கிளில் காரிமங்கலம் நோக்கி மொரப்பூர் பகுதியை நோக்கி வந்து கொண்டிருந்தார் அப்போது மோட்டூர் அருகே அரிசி ஆலை போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்ட நிலையில் தடுமாறி கீழே விழுந்து வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே பரிதவமாக உயிரிழந்தார் இந்த விபத்து குறித்து காரிமங்கலம் காவலர்களுக்கு தகவல் தெரிவித்த நிலையில் விரைந்து வந்த காவலர்கள் வெங்கடேசன் உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து காவலர்கள் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.