தர்மபுரி: பட்டாசு வெடித்து கொண்டாடிய பாமகவினர்

204பார்த்தது
தர்மபுரியில் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்தபின், பழைய பேருந்து நிலையத்திலிருந்து அரூர், திருப்பத்துார், திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன. பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் நலனைக் கருதி, புறநகர் பேருந்துகளையும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, பழைய பேருந்து நிலையத்திலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்குவது குறித்து ஆட்சியர் நேற்று அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, நேற்று சனிக்கிழமை மாலை முன்னாள் எம்எல்ஏ வெங்கடேஷ்வரன் தலைமையில், பாமகவினர் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் பட்டாசு வெடித்துக் கொண்டாடி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

தொடர்புடைய செய்தி