தர்மபுரி: சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு

0பார்த்தது
தர்மபுரி: சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு
அரூர் நகர பகுதியை சேர்ந்த சம்பத் வயது 28 இவர் அதே பகுதியை 16 வயது சிறுமியை காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழந்தை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமி அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக தகவல் அறிந்த அரூர் மகளிர் காவலர்கள் , சம்பத் மீது இன்று சனிக்கிழமை போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி