பாப்பிரெட்டிபட்டி அருகே 10ஆம் வகுப்பு மாணவியை கஞ்சா போதையில் தகாத வார்த்தைகளால் பேசி, தோளில் கை வைத்து வன்சீண்டல் செய்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், மாணவியின் பெற்றோரை அந்த வாலிபர் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. காயமடைந்த பெற்றோர்கள் பாப்பிரெட்டிபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை பாப்பிரெட்டிப்பட்டி காவலர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.