தர்மபுரி மின் கோட்டம், சோலைக் கொட்டாய் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை, 30. 05. 2026 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். மதிகோன்பாளையம், தருமபுரி பேருந்து நிலையம், குண்டல்பட்டி, A. ஜெட்டிஅள்ளி, செட்டிகரை, வெள்ளோளை, முக்கல் நாயக்கன் பட்டி, கோம்பை, சோலைகொட்டாய், நயக்கனஅள்ளி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என செயற்பொறியாளர் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.