இலக்கியம்பட்டி துணைமின் நிலையத்தில் இன்று மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் இலக்கியம்பட்டி, பாரதிபுரம், செந்தில்நகர், ஒட்டப்பட்டி, எர்ரப்பட்டி, ஜீவாநகர், வெங்கட்டம்பட்டி, தேவரசம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அரூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று அரூர், மோப்பிரிப்பட்டி, அக்ரஹாரம் பெத்தூர, சந்தப்பட்டி, அச்சல்வாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.