தர்மபுரி: பெண்களுக்கான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

0பார்த்தது
தர்மபுரி: பெண்களுக்கான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
காரிமங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் இணைந்து நடத்திய பெண்களுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், மாவட்ட ஆட்சியர் சதீஸ் கலந்துகொண்டு, ஒசூர் டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 381 பெண்களுக்கு பணி நியமன ஆணைகளை இன்று செவ்வாய்க்கிழமை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தீபா, கல்லூரி முதல்வர் பாலாஜி மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலர் முரளிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.