தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சியர் சதீஸ் தலைமையில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் உதவி உபகரணங்கள் வேண்டி மொத்தம் 538 மனுக்களை அளித்தனர். தகுதியான மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், செப்டம்பர் 15 அன்று முதல்வரால் பெற்றோர் இல்லாத உயர் கல்வியில் சேர்ந்துள்ள 8 தருமபுரி மாவட்ட மாணவ, மாணவியர்களுக்கு முதல் கட்டமாக மடிக்கணினி வழங்கப்பட்டதை தொடர்ந்து, இக்கூட்டத்தில் மேலும் 3 மாணவ, மாணவியர்களுக்கு ஆட்சியர் மடிக்கணினி வழங்கினார்.