தர்மபுரி: கொட்டும்மலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

0பார்த்தது
அரூர், சனிக்கிழமை காலை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரூர் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில், போக்குவரத்து காவல்துறை, சட்டம் ஒழுங்கு காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை, பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அரூர் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தொடங்கி, பைபாஸ் ரோடு வழியாக சென்று மீண்டும் அலுவலகத்தில் முடிந்த இந்த பேரணியில், பங்கேற்றோர் கொட்டும் மழை சாரலிலும் தலைக்கவசம் அணிந்து சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.