தர்மபுரி: அங்காடியில் 10 லட்சத்திற்கு பட்டுக்கூடுகள் விற்பனை

241பார்த்தது
தருமபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் செவ்வாய் கிழமை மாலை நடைபெற்ற ஏலத்தில், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த 30 விவசாயிகள் பங்கேற்றனர். இதில் 1754.100 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன. அதிகபட்சமாக கிலோ ரூ. 708, குறைந்தபட்சமாக ரூ. 372, சராசரியாக ரூ. 556 என தரத்திற்கேற்ப விற்பனையானது. ஒட்டுமொத்தமாக ரூ. 10 லட்சம் மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி