தருமபுரி, மொரப்பூர் மற்றும் கம்பைநல்லூர் காவல் நிலையங்களில் பணிபுரியும் சுமார் 50க்கும் மேற்பட்ட காவலர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் மொரப்பூர் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள், தங்கள் குடும்பத்தினருடன் மொரப்பூர் காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், குடியிருப்புவாசிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.