தருமபுரி தடங்கம் அருகே பெருமாள் மேடு பகுதி மக்கள், தங்கள் குல தெய்வமான சென்றாயபெருமாள் மற்றும் சீலகாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான, பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தும் நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி, அதனை மீட்டுத்தரக் கோரி திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மார்கழி, புரட்டாசி மாதங்களில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.