தருமபுரி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்வதற்காக 'வாட்டர் பெல்' என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை மாவட்ட ஆட்சியர் சதீஸ், நல்லம்பள்ளி ஒன்றியம், உம்மியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று வியாழக்கிழமை மாலை துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் மாணவர்களிடையே தண்ணீர் குடிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் கல்வித்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் இதில் பங்கேற்றனர்.