தர்மபுரி டவுன் வெளிப்பேட்டை அங்காளம்மன் கோயிலில் மகாசிவராத்திரி & மயானக்கொள்ளை விழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று திங்கட்கிழமை தாய்வீட்டார் சீர்வரிசையுடன் அழைப்பு நடந்தது, தொடர்ந்து சுவாமிக்கும் அங்காளம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சிறப்பு திருக்கல்யாண விருந்து அளிக்கப்பட்டது. இன்று 17ம் தேதி மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடைபெறுகிறது.