தர்மபுரி: கஞ்சா விற்பனை ஈடுபட்ட வாலிபர் கைது

379பார்த்தது
தர்மபுரி: கஞ்சா விற்பனை ஈடுபட்ட வாலிபர் கைது
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே அழகுமலை முருகன் கோவில் அடிவாரத்தில் உள்ள மாந்தோப்பில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், பாப்பாரப்பட்டி காவல்துறையினர் வெள்ளிக்கிழமை மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அமர்நாத் (22) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 450 கிராம் கஞ்சா பொட்டலங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி