தர்மபுரி: மூதாட்டி இடம் நகை பறித்த வாலிபர் கைது

1பார்த்தது
தர்மபுரி: மூதாட்டி இடம் நகை பறித்த வாலிபர் கைது
அரூர் அடுத்துள்ள மோப்பிரிப்பட்டியில், 80 வயது மூதாட்டி கமலா வீட்டில் அமர்ந்திருந்தபோது, 18 வயது வாலிபர் பணம் கேட்டு தகராறு செய்து, பணம் இல்லை எனக்கூறிய மூதாட்டியின் சுருக்குப்பையில் இருந்த அரை பவுன் தங்க நகையை திருடிச் சென்றார். இதுகுறித்து கமலாவின் குடும்பத்தினர் அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், வெள்ளிக்கிழமை மாலை காவல்துறையினர் நகையை திருடிய 18 வயது வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.