
தர்மபுரி: முக்கிய பிரச்சினைகள் தீர்க்கப்படும் - சௌமியா உறுதி
தர்மபுரி தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் சௌமியா அன்புமணி, தர்மபுரி மாவட்டம் பின்தங்கிய மாவட்டம் என்றும், இதுவரை எந்த நலத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் கூறினார். ஞாயிற்றுக்கிழமை இரவு தர்மபுரி நகரப் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், மாவட்டத்தின் முக்கிய பிரச்சினைகள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதிமுகவின் வாக்குறுதிகள் ஆட்சி அமைந்தவுடன் நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்து வாக்கு சேகரித்தார்.

























