ஒசூர்: வடமாநில வாலிபரை தாக்கிய 2 பேருக்கு காப்பு

72பார்த்தது
ஒசூர்: வடமாநில வாலிபரை தாக்கிய 2 பேருக்கு காப்பு
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அபுஜித் சிங் சவுத்ரி (22). இவர் ஓசூர் சிப்காட் பேடரப்பள்ளி ராஜாஜி நகரில் தங்கி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 24-ம் தேதி அன்று இவர் அங்குள்ள சிவன் கோவில் பகுதியில் சென்ற போது டூவீலரில் பின்னால் வந்த இரண்டு பேர் ஹாரன் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அவர்கள் அபுஜித்தை தாக்கினர். மேலும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 

இது குறித்து அவர் ஓசூர் சிப்காட் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கை விசாரித்து அபுஜித்தை தாக்கியது அத்திப்பள்ளியை சேர்ந்த சசிக்குமார் (31), பள்ளூரை சேர்ந்த அஜய் (19) என தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி