தர்மபுரி: குட்கா கடத்திய 3 பேர் கைது

382பார்த்தது
தர்மபுரி: குட்கா கடத்திய 3 பேர் கைது
காரிமங்கலம் காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் காவலர்கள் வியாழக்கிழமை மாலை கும்பாரஹள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி மூட்டையுடன் நின்ற மூன்று வாலிபர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர்களிடம் தடை செய்யப்பட்ட 50 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. காவலர்கள் நடத்திய விசாரணையில், அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி, வீரமணி, நடேசன் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, குட்காவைக் கடத்த முயன்ற மூவரையும் காவலர்கள் கைது செய்தனர்.