தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் வனப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட யானைகள் கர்நாடக வனப்பகுதியில் இருந்து தமிழகத்திற்குள் நுழைந்துள்ளன. வியாழக்கிழமை பென்னாகரம் - ஒகேனக்கல் சாலையில் உணவு மற்றும் குடிநீர் தேடி ஒற்றை யானை ஒன்று சுற்றி வருவதால், அப்பகுதியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். யானையினை வனப்பகுதிக்குள் விரட்டுமாறு அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.