தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் அருகே பொம்மஅள்ளியில் உள்ள மகாசக்தி மாரியம்மன் கோயில், சின்ன மாரியம்மன் கோயில் மற்றும் ஓம் சக்தி மாரியம்மன் கோயில்களில் வியாழக்கிழமை உண்டியல்கள் உடைக்கப்பட்டு, அம்மன் தங்க நகை, குத்துவிளக்கு மற்றும் சுமார் 1 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும், சிசிடிவி கேமரா ஹார்ட் டிஸ்கும் திருடப்பட்டுள்ளது. இது குறித்து காரிமங்கலம் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.