தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தர்மபுரி மாவட்ட அதிமுக வர்த்தக அணி சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா தர்மபுரி அரசு மருத்துவமனை முன் இன்று புதன்கிழமை நடைபெற்றது. வர்த்தக அணி மாவட்ட செயலாளர் எம். பொன்னுவேல் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், மாநில விவசாய பிரிவு தலைவர் டி. ஆர். அன்பழகன் முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர் கே. பி. அன்பழகன், பாலக்கோடு எம். எல். ஏ. ஆகியோர் கலந்துகொண்டு, 2000 அசைவ உணவை அன்னதானமாக வழங்கினர்.