தர்மபுரி மாவட்ட செயலாளரும் அதிமுக முன்னாள் அமைச்சருமான கே.பி. அன்பழகன், பாலக்கோடு தொகுதிக்குட்பட்ட தண்டுகாரணஅள்ளி, தொட்டார்தனஅள்ளி, நல்லாம்பட்டி, வேப்பிலஅள்ளி பகுதிகளில் புதன்கிழமை மாலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திமுக கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டினார். குறிப்பாக, சிலிண்டருக்கு 100 ரூபாய் தருவதாக கூறியவர்கள் அதை வழங்கவில்லை என்றும், 100 நாள் வேலை திட்டத்தில் கூட 50 நாட்கள் வேலை வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.