தர்மபுரி: காரிமங்கலத்தில் 90 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை

55பார்த்தது
காரிமங்கலத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடை சந்தையில் நேற்று மாடுகள், ஆடுகள், நாட்டுக்கோழிகள் விற்பனை செய்யப்பட்டன. மாடுகள் ரூ. 8,000 - 58,000 வரையிலும், ஆடுகள் ரூ. 3,000 - 22,000 வரையிலும், நாட்டுக்கோழிகள் ரூ. 300 - 1,100 வரையிலும் விலை போனது. வியாபாரிகள் தரப்பில் நேற்று ஒரே நாளில் ரூ. 90 லட்சம் மதிப்பிலான கால்நடைகள் வர்த்தகம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி