தர்மபுரி: இறுதி வாக்காளர் பட்டியலை ஆட்சியர் வெளியிட்டார்

539பார்த்தது
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சதிஷ் இன்று திங்கட்கிழமை வெளியிட்டார். இதில் மொத்தம் 12,40,108 வாக்காளர்கள் உள்ளனர். 6,24,647 ஆண்களும், 6,15,311 பெண்களும், 150 மூன்றாம் பாலினத்தவரும் இதில் அடங்குவர். 5 தொகுதிகளில் மொத்தம் 11,161 வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த வெளியீட்டு நிகழ்வில் அரசியல் கட்சி பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி