தர்மபுரி: விஷம் குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை

0பார்த்தது
தர்மபுரி: விஷம் குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை
பாலக்கோடு காட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவர் கண்ணப்பன், உடல்நிலை சரியில்லை எனக் கூறி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். சனிக்கிழமை நடந்த இச்சம்பவத்தில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து பாலக்கோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சென்று வந்த மாணவர், கல்லூரிக்குச் செல்லாமல் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.