தர்மபுரி: நீச்சல் குளத்தில் குவிந்த மக்கள் கூட்டம்

0பார்த்தது
தர்மபுரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இலக்கியம்பட்டி பகுதியில் உள்ள ராஜாஜி நீச்சல் குளத்தில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாக குளிக்கவும், நீச்சல் கற்றுக்கொள்ளவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறுவர், சிறுமிகள் மற்றும் பெற்றோர்கள் வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக கோடை விடுமுறையின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று, நீச்சல் குளத்தில் ஏராளமானோர் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது.