தர்மபுரி: நீர்நிலை ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம்

0பார்த்தது
காரிமங்கலம் அடுத்த சின்ன மாட்லாம்பட்டி நெடுஞ்சாலை ஓரம், நீர்நிலை பகுதியை ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து வந்த 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் வீடுகளை, மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று வெள்ளிக்கிழமை எந்த அறிவிப்பும் இன்றி 100க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஜே.சி.பி. வாகனங்களுடன் வந்து அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர். வாழ்வாதாரம் இல்லை என மனு அளித்தும் பட்டா வழங்காததால், நீதிமன்றத்தில் முறையிட்டிருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அப்பகுதி மக்கள் வேறு வழியின்றி கோவிலில் தஞ்சமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி