தர்மபுரி: நல திட்ட பணிகளுக்கு தர்மபுரி எம்பி பூமி பூஜை

234பார்த்தது
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியம் மிட்டாரெட்டி அள்ளி ஊராட்சியில், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று நேற்று புதன்கிழமை மாலை 30,000 லிட்டர் குடிநீர் தொட்டி அமைக்கும் பணிக்கு திமுக தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் ஆ. மணி MP பூஜை செய்து துவங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஏ. ஜெட்டிஹள்ளி ஊராட்சியில் கான்கிரீட் சாலை மற்றும் கால்வாய் அமைக்கும் பணிக்கும் பூமி பூஜை செய்து அவர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நல்லம்பள்ளி ஒன்றிய கழக பொறுப்பாளர் ஏ.எஸ். சண்முகம், தர்மபுரி மேற்கு நகர கழக பொறுப்பாளர் கௌதம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி