தர்மபுரி: மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

220பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் இன்று (பிப். 18) புதன்கிழமை பிற்பகல் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் (TRATDAC) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நேற்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தின் போது, அவர்களை மனிதாபிமானமற்ற முறையில் அலைக்கழித்ததாக தமிழ்நாடு அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. உதவித்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தியும், அரசின் அலட்சியத்தை கண்டித்தும் மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இதில் பங்கேற்றனர்.