தர்மபுரி: பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய திமுகவினர்

70பார்த்தது
தமிழக முழுவதும் இன்று தந்தை பெரியாரின் 51 வது நினைவு நாளை அனுசரித்து வரும் சூழலில், இன்று காலை தருமபுரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு திமுக சார்பில் கிழக்கு மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்பிரமணி எம்எல்ஏ தலைமையில் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் நகரச் செயலாளர் நாட்டான் மாது, மாவட்டப் பொருளாளர் தங்கமணி, முன்னாள் நகரச் செயலாளர் அன்பழகன், மாணவரணி அமைப்பாளர் பெரியண்ணன், நகரமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி